நவராத்திரி விழா : புஷ்பலதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் (16.10.2020) அன்று “நவராத்திரி விழா” இறையருளால் இனிதே தொடங்கியது.
“உலக உயிர்கள் அனைத்தும் தங்களை தெய்வநிலைக்கு உயர்த்த உழைக்க வேண்டும்” என்ற கொலுவின் தத்துவத்தையும் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மாணவச் செல்வங்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு மண்ணால் செய்யப்பட்ட தெய்வ உருவங்களும், புராண கதைகள் சார்ந்த பொம்மைகளும் கொலுவில் வீற்றிருக்க ஒவ்வொரு நாளும் சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் வணங்குவோம், முப்பெரும் தேவியரின் அருளைப் பெறுவோம்.

