புஷ்பலதா பள்ளிக் குழும வலையொளியில் 12.02.2021 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு, எழுத்தாளர் திரு.செல்வேந்திரன் அவர்கள் “வாசிப்பது எப்படி?” என்ற தலைப்பில் புஷ்பலதா பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே உரையாற்றினார். ‘பதின் பருவத்தில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இன்பம் வாசித்தல்’, ‘கனவும் கற்பனையும் கொண்ட ஒருவன் தான் தலைவனாக முடியும்; அக்கனவையும் கற்பனையையும் தருவது வாசிப்பு’,
‘வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு செயல்பாடு அன்று; கட்டாயம ; செய்ய வேண்டியது; தொடர்ச்சியாக செய்ய வேண்டியது.’ ‘வாசிக்கும் இளைஞன் வழிகாட்டும் தலைவன்’ போன்ற உண்மைகளைத் தன் உரைவீச்சில் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.